தமிழக செய்திகள்

3 ஆண்டு சட்ட படிப்புகளுக்கு நாளை முதல் வின்ணப்பிக்கலாம்..!

3 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 3 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரஞ்சித் ஓமன் ஆபிரகாம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சட்ட கல்லூரிகளில் 3 ஆண்டுக்கான சட்டப்படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இதில் சேர்வதற்கான விண்ணப்பங்களை www.tndalu.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்ணப்பங்களை வரும் ஆகஸ்டு 10ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்