தமிழக செய்திகள்

அக்னிவீர் வாயு திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்

அக்னிவீர் வாயு திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு திட்டத்தின் கீழ் பணிபுரிய விருப்பமுள்ள பதிவுதாரர்கள் தேர்வில் கலந்து கொள்வதற்கு இம்மாதம் 17-ந் தேதி வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் விண்ணப்பிப்பதற்கு பிறந்த தேதி 27.06.2003 முதல் 27.12.2006-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி 12-ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு குறித்த பாடத்திட்டம் மற்றும் மாதிரித்தாள்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இத்தேர்வு குறித்த விவரங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 044-27660250, 9080022088 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து