தமிழக செய்திகள்

பொம்மிடி அருகேகிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள காணிக்காரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். விவசாயி. இவருடைய இளைய மகன் மணிகண்டன் (வயது 12). மணிகண்டன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தான். பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவனை பராமரித்து வந்தனர்.

இந்த நிலையில் மணிகண்டன் விவசாய தோட்டத்திற்கு நடந்து சென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்து விட்டான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு பொம்மிடி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது மணிகண்டன் ஏற்கனவே இறந்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்