தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

திருவண்ணாமலை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

தினத்தந்தி

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூர் கத்தாழம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 20).

இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்தார்.

நேற்று மாலையில் எடப்பாளையம் மேலத்திக்கான் பகுதியில் புதிதாக வீடு கட்டும் இடத்தில் மின் விளக்கு பொருத்தி கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜமாணிக்கம் மயக்கம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு