அரக்கோணத்தை அடுத்த மிட்டபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். கார் டிரைவர் இவரது மனைவி விமலா (21). திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு வாரத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை விமலா திடீரென உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அரக்கோணம் தாலுகா போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்