திருவள்ளூர்,
திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை அடுத்த புட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரியா (24 வயது). நர்சிங் படித்துள்ள இவர், திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார்.
கடந்த 2024-ம் ஆண்டு சென்னை மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த ரோகித் (29 வயது) என்பவர் ஜெயப்பிரியாவுக்கு அறிமுகமாகி உள்ளார். இந்த நிலையில், ரெயில்வே மருத்துவமனையில் நர்ஸ் வேலை வாங்கி வருவதாக கூறி ரூ.10 லட்சத்து 80 ஆயிரத்து 960 வரை பெற்றுக்கொண்டு ரோகித் போலியான பணி ஆணையை ஜெயபிரியாவிடம் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் ரோஹித் போலி பணி நியமன ஆணையை வழங்கி மோசடி செய்ததை அறிந்த ஜெயபிரியா ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரையடுத்து இன்ஸ்பெக்டர் சசிராஜன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரோகித்தை நேற்று கைது செய்தார்.