தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த எட்வர்ட்ராஜா மகன் பிரவீன்(எ) அம்பர்லா (வயது 30), தொழிலாளி. இவர் மது போதையில் நேற்று திரேஸ்புரம் வடபாகம் புறக்காவல் நிலையத்தின் மீது கற்களை வீசியுள்ளார். இதில் காவல் நிலையத்தின் கண்ணாடி கதவு சேதமடைந்துள்ளது. இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, பேரூரணி சிறையில் அடைத்தனர்.