தமிழக செய்திகள்

நெல்லையில் கஞ்சா வழக்கில் வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் நெல்லை மாநகரில் கஞ்சா விற்று எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்தார்.

தினத்தந்தி

திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை, சமாதானபுரம், சத்யா தெருவைச் சேர்ந்த சந்தனராஜ் மகன் கௌதம் சரவணன் (வயது (21) என்பவர் திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்தார்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) வினோத் சாந்தாராம், போலீஸ் உதவி கமிஷனர் (பாளையங்கோட்டை சரகம்) சுரேஷ், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மகேஷ்குமார் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி நற்று கௌதம் சரவணன், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து