தமிழக செய்திகள்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூசி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தினத்தந்தி

தூசி

செய்யாறு தாலுகா தூசி அருகே கீழ்நேத்தப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி, கூலி தொழிலாளி.

இவரது 2-வது மகன் கார்த்திக் (வயது 27). இவருக்கு திருமணம் செய்து வைக்க 2 ஆண்டுகளுக்கு பெண் பார்த்து வந்தனர். இந்த நிலையில் ஆடி மாதம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் கூறியுள்ளனர்.

இதனால் மனவேதனையில் இருந்த கார்த்திக் கடந்த 30-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு கொண்டார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்றபின்னர் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கார்த்திக் இறந்து விட்டதாக கூறினார்.

இதுகுறித்து மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு