தமிழக செய்திகள்

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

வத்தலக்குண்டு அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் அனிரோஸ் (வயது 20). இவர், வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் போர்வெல் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று காலை இவர், வத்தலக்குண்டு அருகே மல்லனம்பட்டியில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்துக்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் சக தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அனிரோஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்லா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...