தமிழக செய்திகள்

காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை - கல்லால் தாக்கி மதுபோதையில் நண்பர்களே கொலை செய்த கொடூரம்

மதுபோதையில் நண்பர்களுடன் இணைந்து கொலை செய்ததாக ஆபிரகாம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

தினத்தந்தி

சேலம்,

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே காதல் விவகாரத்தில் இளைஞரை மது போதையில் சக நண்பர்களே கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சடையம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான வேணுகோபால் தனது நண்பர்களுடன் கடந்த வியாழக்கிழமை இரவு பைக்கில் சென்றுள்ளார்.

அவர் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை அப்பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் என்பவர் வேணுகோபாலை கொலை செய்துவிட்டு கால்வாயில் வீசியதாக கூறி சரணடைந்துள்ளார். இதையடுத்து வேணுகோபாலின் உடலை தேவூர் போலீசார் கைப்பற்றினர்.

தனது நண்பரின் சகோதரியை காதலிப்பதாக வேணுகோபால் வற்புறுத்தி வந்ததால் கண்டித்ததாகவும் அப்போது ஏற்பட்ட தகராறில் மதுபோதையில் நண்பர்களுடன் இணைந்து கொலை செய்ததாகவும் ஆபிரகாம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை