சென்னை,
மண்ணடி லிங்கிசெட்டி தெருவில் பழமையான மல்லிகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேரோட்டம் கடந்த மாதம் 29ம் தேதி நடந்தது. தேரை ஆங்காங்கே நிறுத்துவதற்காக சக்கரத்தின் கீழ் மரத்தடுப்பு கட்டை வைக்கும் பணியில் மண்ணடி புது தெருவை சேர்ந்த குபேந்திரன் (24) என்பவர் ஈடுபட்டிருந்தார்.
தேரின் வலது சக்கரத்தில் தடுப்புக்கட்டை வைத்தபோது எதிர்பாராத விதமாக குபேந்திரன் கீழே விழுந்து தேர் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் துடித்த குபேந்திரனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குபேந்திரன் பரிதாபமாக பலியானார். மண்ணடியில் மல்லிகேஸ்வரர் கோவில் தேரோட்டத்தின்போது தேர்சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.