தமிழக செய்திகள்

மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது

மயிலாடுதுறை அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

மயிலாடுதுறை அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மாணவி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அரசூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சபாபதி மகன் சஞ்சய்(வயது 21). இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு அந்த மாணவியை தனது வீட்டிற்கு சஞ்சய் அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது.

போக்சோவில் கைது

இதையடுத்து மாணவியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், மாணவி 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகவல்லி மற்றும் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் ஆசைவார்த்தை கூறி மாணவியை கர்ப்பமாக்கிய சஞ்சய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை