கடலூர்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட நிர்வாகிகளுக்கு மண்டல பயிலரங்கம் கடலூரில் நடந்தது. இதற்கு மாநில தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மகேஷ் வரவேற்றார். மாநில துணை தலைவர்கள் மணிகண்டன், அர்த்தனாரி ஆகியோர் கலந்து கொண்டு, சங்க நிர்வாகிகளுக்கு பயிற்சி அளித்தனர். மாநில பொதுச்செயலாளர் சங்கரலிங்கம் தொடக்க உரையாற்றினார்.
பயிலரங்கில் முன்னாள் மாநில துணை தலைவர் வரதன் கலந்து கொண்டு சங்கமும், தலைமை பண்பும் என்ற தலைப்பிலும், முன்னாள் மாவட்ட தலைவர் ஞானபிரகாசம் வருவாய்த்துறையும், பொதுமக்களும் நேற்று-இன்று- நாளை என்ற தலைப்பிலும், முன்னாள் மாவட்ட தலைவர் அபரஞ்சி போராட்டங்களும், படிப்பினைகளும் என்ற தலைப்பிலும் பேசினர். இதில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மத்திய செயற்குழு உறுப்பினர் ரத்தினக்குமரன் செய்திருந்தார். முடிவில் மாநில பொருளாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.