தமிழக செய்திகள்

உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் - உதயநிதி புகழாரம்

திராவிடம் என்னும் கருத்தியலின் முழுவடிவமாய்த் திகழும் பெரியாரின் வாரிசுகள் நாம் என்பதில் பெருமை கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை… என தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார்.

'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்று உரத்துச்சொல்லி நம் வாழ்வியலை வடிவமைத்த தந்தை. கொள்கை உரமூட்டி- எதிர்கால லட்சியங்களுக்கு துணை நின்று- திராவிடம் என்னும் கருத்தியலின் முழுவடிவமாய்த் திகழும் பெரியாரின் வாரிசுகள் நாம் என்பதில் பெருமை கொள்வோம்!

சுயமரியாதைச் சுடர், அறிவாசான் தந்தை பெரியாரின் பிறந்தநாளில் கழகத் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழியில் சமூகநீதிப் பயணம் தொடர உறுதியேற்போம்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு