சென்னை,
துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று மதுரை, சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, மதுரை வண்டியூரில், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் சிலைக்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு அவர் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.
சிவகங்கை மாவட்டம் திருக் கோஷ்டியூர் சவுமிநாராயணப் பெருமாள் கோவிலுக்கும். சிவ கங்கையில் உள்ள ராணி வேலு நாச்சியார் அரண்மனைக்கும் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் செல்கிறார்.
இந்தநிலையில், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பெரிய கருப்பன், மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகள் வரவேற்றனர். ஹெலிகாப்டர் மூலம் திருக்கோஷ்டியூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டார்.