தமிழக செய்திகள்

முதலமைச்சர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்திப்பு

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்தித்து பேசி வருகிறார்.

தினத்தந்தி

சென்னை,

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதற்கிடையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் பாரதிய ஜனதா கட்சி, எதிர்வரும் தேர்தலிலும் இதே கூட்டணியில் தொடரும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்து வந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறி, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தற்போது சந்தித்து பேசி வருகிறார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது வீட்டில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என பாஜகவினர் கூறி வந்தாலும், தற்போதைய தமிழக அரசியல் சூழலில் இந்த சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு