திருச்சி,
தமிழ் மொழியின் 3 ஆயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் வகையில், ஆராய்ச்சி கட்டுரைகளை தமிழாற்றுப்படை என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து அரங்கேற்றி வருகிறார். அந்த வரிசையில், 24-வது ஆளுமையாக பெரியார் குறித்த கட்டுரையை நேற்று திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் அரங்கேற்றினார்.
தமிழாற்றுப்படையின் நிறைவுக் கட்டுரையான இதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். பேராசிரியர் அருணன் வாழ்த்துரை வழங்கினார். வெற்றித் தமிழர் பேரவையின் திருச்சி மாவட்டத் தலைவர் பி.வீ.பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக ஜெயக்கண் நன்றி கூறினார். விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-