செய்திகள்

முழு ஊரடங்கின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது - டாஸ்மாக் நிர்வாகம்

முழு ஊரடங்கின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் ஊரடங்கை ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஜூலை 5, 12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் எந்த வித தளர்வும் இல்லாமல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முழு ஊரடங்கு அமலாகும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (ஜூலை 5, 12, 19, 26 ஆகிய தேதிகள்) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமையில் தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்க படுவதால் டாஸ்மாக் மதுபான கடைகள் விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?