செய்திகள்

டாட்டா மோட்டார்ஸ் விற்பனை 5% குறைந்தது

சர்வதேச அளவில் டாட்டா மோட்டார்ஸ் விற்பனை 5% குறைந்தது

புதுடெல்லி

சர்வதேச அளவில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை, மார்ச் மாதத்தில் 5 சதவீதம் குறைந்துள்ளது.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த மார்ச் மாதத்தில், உலக அளவில் (ஜகுவார்-லேண்டு ரோவர் சொகுசு கார்கள் உள்பட) மொத்தம் 1,45,459 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 5 சதவீதம் குறைவாகும். எனினும், முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 32 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அப்போது விற்பனை 1,10,262-ஆக இருந்தது.

இந்நிறுவனம் உள்நாட்டில், ஒட்டுமொத்த அளவில் 68,709 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அது 69,409-ஆக இருந்தது. ஆக, விற்பனை 1 சதவீதம் குறைந்துள்ளது. இதில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 2 சதவீதம் சரிந்து (20,266-ல் இருந்து) 17,810-ஆக குறைந்து இருக்கிறது. அதே சமயம் வர்த்தக வாகனங்கள் விற்பனை 4 சதவீதம் அதிகரித்து 50,917-ஆக இருக்கிறது.

மும்பை பங்குச்சந்தையில், புதன்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனப் பங்கு ரூ.206.40-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.216.85-க்கும், குறைந்தபட்சமாக ரூ.205.75-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.215.65-ல் நிலைகொண்டது.

சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

குவைத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; குஜராத்தில் தரையிறக்கம்

மேற்கு வங்கத்தில் 2 செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி

79-வது நினைவு தினம்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்