பட்னா
ஆனால் பாஜகவோ தேஜஸ்விக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. ஒன்று அவர் பதவி விலக வேண்டும் இல்லையென்றால் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று கூறியுள்ளது.
இந்நிலையில் பாஜக தலைவர் சுஷில் குமார் மோடி முதல்வர் நிதிஷ் குமார் தனது நிலையில் அதாவது தேஜஸ்வியை பதவி விலகச் சொல்வதிலிருந்து உறுதியாக இருக்க வேண்டும் என்றார்.
இதனிடையே ஐக்கிய ஜனதா தளத்தின் பேரவை உறுப்பினர் ஷ்யாம் பகதூர் சிங் இன்றே கூட்டணி உடைவது நல்லது... நாங்கள் பாஜகவுடன் இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளோம் என்றார்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் கூட்டணியின் மூன்று கட்சித் தலைவர்கள் தங்களுக்குள் பேசி ஒரு தீர்வுக்காண வேண்டும் என்றனர்.
பாஜகவோ நிதிஷ் கொடுத்த ஆதரவு தங்களுக்கு முக்கியமானது என்று கூறியுள்ளது. தேஜஸ்வி உட்பட ரா.ஜ.த உறுப்பினர்கள் 100 விழுக்காடு வாக்களித்தனர். நான்கு சுயேச்சை உறுப்பினர்களும் மீரா குமாருக்கு ஆதரவாக வாக்களித்தனர். மூன்று மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் உறுப்பினர்கள் மீரா குமாருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.