ஹைதராபாத்,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. தெலுங்கானாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த சில நாட்களாக உச்சத்தை அடைந்து வருகிறது. பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தெலுங்கானாவில் இன்று புதிதாக 1,640 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 52,466 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 455 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரேநாளில் 1,007 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 40,334 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 11,677 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக ஐதராபாத்தில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலைக்கு சென்று விட்டது என்றும், மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.