செய்திகள்

மெக்சிகோவில் பயங்கரம்: துப்பாக்கி சண்டையில் 14 பேர் சாவு

மெக்சிகோவில் நடந்த துப்பாக்கி சண்டையில் 14 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோவின் கோகுய்லா மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. ஆயுதம் ஏந்தி செயல்பட்டு வரும் இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் கோகுய்லா மாகாணத்தின் வில்லா யூனியன் நகரில் அரசு ஊழியர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இது பற்றி தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போதைப்பொருள் கடத்தல்காரர்களை சுற்றிவளைத்து தாக்கினர்.

இரு தரப்புக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். அதே போல் பாதுகாப்பு படையினர் 4 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு