புதுடெல்லி,
ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனம் தொடர்பான முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்வதற்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நேற்றுவரை தடை விதித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு விசாரணைக்கு வந்தபோது வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்டு 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்வதற்கான தடையை நீட்டித்து அவர் உத்தரவிட்டார். ஜாமீன் மனுக்களை அன்று விசாரிப்பதாகவும், சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை அடுத்த மாதம் 6-ந் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.