செய்திகள்

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 19ந்தேதி நடைபெறும்

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் வருகிற 19ந்தேதி நடைபெறும்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் வருகிற 19ந்தேதி காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.

துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்திற்கு தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாளை இரவு அவர் சென்னை திரும்புகிறார். இந்த கூட்டத்தில் அவரும் கலந்து கொள்ள இருக்கிறார்.

இக்கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது மற்றும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு