ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி தாலுகா, வைகை ஆறு உற்பத்தியாகும் பகுதியான கடமலை-மயிலை ஒன்றியத்தில் வைகை ஆற்றில் நள்ளிரவு நேரத்தில் தொடர்ந்து மணல் திருடும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவுக்கு புகார்கள் வந்தன. இதனை யடுத்து கலெக்டர் உத்தர வின் படி, ஆண்டிப்பட்டி தாசில் தார் அர்ச்சுனன் தலைமையில் வரு வாய்த்துறை அதிகாரிகள் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கடமலைக் குண்டு வைகை ஆற்றில் பாலத்தின் அடி யில் 20-க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் சாக்கு மூட்டைகளில் அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர். அதிகாரிகளை பார்த்ததும் அவர்கள் தப்பி யோடி விட்டனர்.
இதனையடுத்து அந்த பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது அந்த இடத் தில் பல நாட்களாக மணல் அள்ளப்பட்டு வருவது தெரிய வந்தது. பின்னர் அங்கு இருந்த 50 மணல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடமலைக்குண்டு போலீசில் ஒப்படைத்தனர். வைகை ஆற்றில் மணல் அள்ளும் பகுதிக்கு அருகே கடமலைக் குண்டு போலீஸ் நிலையம் உள்ளது.
ஆனால் மணல் அள்ளுபவர் கள் மீது போலீசார் நட வடிக்கை எடுக்கவில்லை. மேலும் இதுகுறித்து புகார் கொடுத்தும் கண்டுகொள் வதில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே கடமலை- மயிலை ஒன்றியத்தின் நீர்ஆதார மாக விளங்கும் வைகை ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.