செய்திகள்

‘ஹனிடிராப்’ முறையில் எம்.எல்.ஏ.க்களை மிரட்டிய விவகாரம்: ஆபாச வீடியோக்களை அழிக்கும்படி கோரிக்கை-திடுக்கிடும் தகவல்கள் - மத்திய குற்றப்பிரிவு போலீசாருடன் பாஸ்கர்ராவ் ஆலோசனை

‘ஹனிடிராப்‘ முறையில் எம்.எல்.ஏ.க்களை மிரட்டிய விவகாரத்தில் ஆபாச வீடியோக்களை அழிக்கும்படி போலீசாருக்கு சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இதுபற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசாருடன், மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு,

வடகர்நாடகத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், முன்னாள் மந்திரியுமான ஒருவரிடம் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக கூறி ரூ.10 கோடி கேட்டு ஒருகும்பல் மிரட்டுவதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்போது இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

விசாரணையின் அடிப்படையில் சிவமொக்காவை சேர்ந்த ராகவேந்திரா, அவருடைய தோழி புஷ்பா உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஹனிடிராப் முறையில் அவர்கள் பணம் பறித்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் என்று 10-க்கும் அதிகமானவர்களிடம் பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது.

இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, ஹனிடிராப் முறையில் சிக்கிய எம்.எல்.ஏ.க்களை, அதில் சிக்கவைத்த இளம்பெண்கள் பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பவனில் சந்தித்து உள்ளனர். இந்த வேளையில் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் கிராம வளர்ச்சி தொடர்பான முகாம் நடத்துவதாக கூறி இளம்பெண்கள் தங்களது செல்போன் எண்களை கொடுத்துள்ளனர். அதன்பிறகு முகாம் தொடர்பாக பேசுவதாக கூறி அவர்கள் இரவு 10 மணிக்கு மேல் பேசி வந்துள்ளதோடு, தங்களுடைய ஆபாசமான படங்களை அனுப்பியுள்ளனர்.

எம்.எல்.ஏ.க்கள் இளம்பெண்களின் அழகில் மயங்கிய பிறகு, அவர்கள் விடுதிகளில் அறை எடுத்து ஒன்றாக தங்கியுள்ளனர். இந்த வேளையில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் தாங்கள் நெருக்கமாக இருப்பதை இளம்பெண்களே தங்களது கைப்பையில் பொருத்தி இருக்கும் ரகசிய கேமராக்களில் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வீடியோக் களை வைத்து மர்மநபர்கள் அவர்களிடம் பணம் பறித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஆபாச வீடியோக்கள் தங்களிடம் உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்களிடம் கூறியும் அவர்கள் பணம் கேட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது தேர்தல் நடைபெற உள்ளதால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஆபாச வீடியோக்கள் வெளியில் கசியாமல் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக போலீசாரிடம் சில எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கைகள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சிலர் தங்களது ஆபாச வீடியோக்களை அழித்து விடும்படியும் போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது ஹனிடிராப் முறை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட உள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் சந்தீப் பட்டீல், பாஸ்கர்ராவிடம் கூறியுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக பிரிமீயர் லீக் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் தொடர்பாகவும் விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு