* சுமார் ரூ.21 லட்சம் கோடி மதிப்பிலான சீன பொருட்களுக்கு புதிதாக 10 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா. சபைக்கான சீன தூதர் ஜாங் ஜுன் கருத்து தெரிவிக்கையில், இது பகுத்தறிவில்லாத பொறுப்பற்ற செயல். இது சீனாவை புண்படுத்துகிறது. இது உலகையும் புண்படுத்துகிறது. இது நிச்சயமாக அமெரிக்காவின் நீண்ட கால நலன்களுக்கானது அல்ல என குறிப்பிட்டார்.