மும்பை,
மராட்டிய உணவு, பொதுவினியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மந்திரி சகன் புஜ்பால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனா அச்சுறுத்தல் நீடிக்கிறது. ஏழைகள் இன்னும் வேலையில்லாமல் இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் ரேஷனில் இலவசமாக உணவு பொருட்கள் வழங்க வேண்டும்.
அடுத்த 3 மாதங்களுக்கு..
இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு ஆரம்பித்து இருந்தாலும் பொருளாதாரத்தை மேம்படுத்த இன்னும் சிறிது காலம் ஆகும். எனவே செப்டம்பர் வரை அடுத்த 3 மாதங்களுக்கு ஏழைகளுக்கு இலவசமாக ரேஷனில் உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவினியோகத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வானிடம் வலியுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.