செய்திகள்

காவலில் வைக்கப்பட்டுள்ளவர் எதற்கும் அஞ்சாதவர்: ராகுல் காந்தி டுவிட்

லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் 4 பேர் உள்பட 9 பேர் பலியாகினர். லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுத்த போலீசார் அவரை தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

தன்னை 28 மணி நேரத்திற்கும் மேலாக எந்த உத்தரவும் இன்றி தடுப்புக்காவலில் வைத்திருப்பதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான பிரியங்கா காந்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது;- காவலில் வைக்கப்பட்டுள்ளவர் எதற்கும் அஞ்சாதவர், உண்மையான காங்கிரஸ்காரர். இறுதிவரை போராடுபவர். இந்த சத்தியாகிரகம் ஓயாது எனப் பதிவிட்டுள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு