செய்திகள்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சங்குத்துறை கடற்கரையில் திரண்டவர்களை விரட்டிய போலீசார்

ஊடரங்கு அமலில் உள்ள நிலையில் சங்குத்துறை கடற்கரையில் திரண்டவர்களை போலீசார் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலகிருஷ்ணன்புதூர்,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கும், சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, திற்பரப்பு, மாத்தூர் தொட்டிப்பாலம், வட்டக்கோட்டை, சங்குத்துறை, முட்டம், சொத்தவிளை கடற்கரை போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து, பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. சுற்றுலா தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தொடங்கினர்.

ஆனால், ஊரடங்கு நீடிப்பதால் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டிருந்தார்.

போலீசார் எச்சரிக்கை

இந்தநிலையில், சங்குத்துறை கடற்கரையில் மாலையில் குழந்தைகளுடன் பலர் திரண்டனர். அவர்கள் கடற்கரையில் நின்றபடியும், அலையில் விளையாடியும் பொழுதை கழித்தனர்.

இதையறிந்த சுசீந்திரம் போலீசார் அங்கு சென்று கடற்கரையில் திரண்டிருந்தவர்களை லத்தியை காட்டி விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தடைகளை மீறி சுற்றுலா தலங்களுக்கு யாரும் வரக்கூடாது என போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து கடற்கரையில் திரண்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதுபோல், சொத்தவிளை கடற்கரையில் திரண்டவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு