செய்திகள்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்குள் மீன் வாங்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்குள் மீன் வாங்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் மிகப்பெரிய மீன் சந்தையான காசிமேட்டில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருவதால் நோய்தொற்று ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் அதனை தடுக்கும் விதமாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்குள் மீன் வாங்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் காலை 3-8 மணி வரை மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பாக அடையாள அட்டை வழங்கப்பட்ட படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகளுக்கு மட்டுமே துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்