செய்திகள்

சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டது வெறும் நிர்வாக ரீதியான நடவடிக்கை மட்டுமே- அமைச்சர் ஜெயக்குமார்

சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டது வெறும் நிர்வாக ரீதியான நடவடிக்கை மட்டுமே என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை

சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

சென்னை முழுவதும் உள்ள 8 லட்சம் முதியவர்கள் சிறப்பு கவனத்துடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை எப்படி மறைக்க முடியும்.

மக்களை திசை திருப்புவது திமுக தலைவர் ஸ்டாலினின் கை வந்த கலை. தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 0.8 சதவீதமாக உள்ளது என்றும் 55 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது வெறும் நிர்வாக ரீதியான நடவடிக்கை மட்டுமே என்றும் அதன் பின்னணியில் வேறு எந்த காரணங்களும் இல்லை என்று கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்