செய்திகள்

எந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கால் துண்டானது

அரியலூர் மாவட்டம் நடுவலூர் கிராமத்தில் மரியம் என்பவரது வயலில் உள்ள தைல மரத்தின் மட்டைகளை எந்திரம் மூலம் உறித்து கொண்டிருந்தார். அப்போது வீரமணியின் லுங்கி எந்திரத்தில் மாட்டிக்கொண்டது.

தினத்தந்தி

உடையார்பாளையம்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகில் உள்ள வில்வகுளம் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் வீரமணி(வயது 23). கூலி தொழிலாளி. இவர் நேற்று அரியலூர் மாவட்டம் நடுவலூர் கிராமத்தில் மரியம் என்பவரது வயலில் உள்ள தைல மரத்தின் மட்டைகளை எந்திரம் மூலம் உறித்து கொண்டிருந்தார். அப்போது வீரமணியின் லுங்கி எந்திரத்தில் மாட்டிக்கொண்டது. இதில் எதிர்பாராத விதமாக வீரமணியின் இடது கால் எந்திரத்தில் சிக்கி துண்டானது. இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்