செய்திகள்

விதவை பெண்ணுக்கு தொல்லை கொடுத்த 5-வது முறையாக முன்னாள் போலீஸ்காரர் கைது

விதவை பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததாக 5-வது முறையாக முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மும்பை போய்வாடா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்தவர் சைலேஷ் கடம். இவர் விதவை பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கி, பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதுகுறித்து போய்வாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து இருந்தனர்.

இந்தநிலையில், ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் விதவை பெண்ணுக்கு தொல்லை கொடுத்தார். இதையடுத்து அவர் கடந்த மாதம் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

போலீஸ்காரர் சைலேஷ் கடம் மீது விதவை பெண் அளித்த புகாரின் பேரில் தாதர், போய்வாடா போலீஸ்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக ஏற்கனவே அவர் 4 முறை கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், அவர் மீண்டும் அந்த விதவை பெண்ணுக்கு தொல்லை கொடுத்துள்ளார். சம்பவத்தன்று அவர் விதவை பெண் தந்தையின் கடைக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். மேலும் விதவை பெண் தனது மனைவி என வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பி உள்ளார்.

இதுகுறித்து விதவை பெண் மீண்டும் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விதவை பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததாக 5-வது முறையாக முன்னாள் போலீஸ்காரர் சைலேஷ் கடமை கைது செய்தனர்.

இதுகுறித்து விதவை பெண்ணின் தந்தை கூறியதாவது:-

பல வழக்குகள் பதிவு செய்தும், பணி நீக்கம் செய்த பிறகும் அவரின் நடவடிக்கைகள் மாறவில்லை. தொடர்ந்து அவர் எனது மகளுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். அவரால் எனது மகள் தற்கொலை செய்ய முயற்சி செய்தார். எனவே சைலேஷ் கடம் எங்கள் பகுதிக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்