செய்திகள்

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 13 ரயில்கள் தாமதம்

டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால், டெல்லிக்கு வர வேண்டிய 13 ரயில்கள் தாமதம் ஆகின.

தினத்தந்தி

புதுடெல்லி,

தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே அதிகாலை நேரங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இன்றும் அதே நிலை நீடித்தது. பனிப்படலமாக காட்சியளித்ததால், குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு புலப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர்.

டெல்லிக்கு வரவேண்டிய 13 ரயில்களும் இன்று தாமதம் ஆகின. கடுமையான குளிரும் காணப்பட்டது. இதனால், சாலையோரம் வசிக்கும் மக்கள் இரவு தங்கும் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

டெல்லியில் இன்று அதிகபட்ச வெப்ப நிலை 22 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 9 டிகிரி செல்சியஸ் வரை எட்டலாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் பனிமூட்டத்தால், டெல்லியில் காற்றின் தரமும் பாதிக்கப்பட்டது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்