ஈரோடு,
ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல் உள்பட 13 மாவட்டங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்களை அமைக்க கூடாது என விவசாயிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் 13 மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.