செய்திகள்

நெல்லையில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை மத்திய அரசுப்பணி தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி

நெல்லையில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை,

நெல்லையில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பட்டதாரி வாலிபர்

நெல்லை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள சேவியர் காலனியை சேர்ந்தவர் சேசுராஜன். இவருடைய மகன் ரத்தினம் சக்திகுமார் (வயது 31). இவர் பட்ட மேற்படிப்பு படித்து விட்டு வேலை தேடி வந்தார். மேலும் அவர் மத்திய அரசு பணிக்கான (யு.பி.எஸ்.சி.) தேர்வு எழுதி இருந்தார். இதில் அவர் தோல்வி அடைந்தார். ஏற்கனவே முதல் முறை எழுதிய தேர்விலும் அவர் தோல்வி அடைந்தார். 2 முறை தேர்வில் தோல்வி அடைந்ததால் ரத்தினம் சக்திகுமார் விரக்தியுடன் காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரத்தினம் சக்திகுமார் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அவருடைய உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தற்கொலை

நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் சுவாமி என்பவருடைய மனைவி பத்மா (35). சுவாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்த பிறகு குழந்தைகளை பத்மா பராமரித்து வந்தார்.

இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.