செய்திகள்

கோடையை சமாளிக்க கண்டலேறு அணையில் இருந்து 2 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்படும் - ஆந்திர முதல்-மந்திரி ஒப்புதல்

தமிழக அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்று கோடையை சமாளிக்க கண்டலேறு அணையில் இருந்து 2 டி.எம்.சி. தண்ணீர் திறக்க ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஒப்புதல் அளித்து உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தமிழக அரசு ஆந்திர மாநில அரசுடன் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் மூலம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி ஆந்திர மாநில அரசு ஆண்டுதோறும் கண்டலேறு அணையில் இருந்து 12 டி.எம்.சி தண்ணீரை தமிழக எல்லையில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்துக்கு திறந்துவிட வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. முதல் தவணையாகவும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. 2-வது தவணையாகவும் திறந்துவிட வேண்டும்.

போதுமான மழையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டுகளில் 12 டி.எம்.சி. தண்ணீர் முழுமையாக திறந்துவிடப்படவே இல்லை. இருந்தாலும் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பல்வேறு வழிகளில் தமிழக அரசு சமாளித்து வருகிறது. போதுமான அளவு தண்ணீர் திறக்கப்படாததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அவ்வப்போது முற்றிலும் வறண்டு போனதுடன், மாநகரில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளிலும் தற்போது 6 ஆயிரத்து 140 மில்லியன் கன அடி (6.1 டி.எம்.சி.) தண்ணீர் இருப்பு உள்ளது. இதன்மூலம் சென்னை மாநகருக்கு கோடை காலத்தில் முழுமையாக தண்ணீர் வினியோகம் செய்ய முடியாது.

எனவே, 2-ம் தவணையாக வழங்க வேண்டிய 4 டி.எம்.சி. தண்ணீரில் முதல் கட்டமாக 3 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேற்று நேரில் சென்று வலியுறுத்தினர்.

அதன்படி சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறக்க ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஒப்புதல் அளித்துள்ளார்.

தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி-கோதாவரி நதிகளை இணைப்பது தொடர்பாக அளித்த கடிதத்தையும், அமைச்சர்கள் ஜெகன்மோகன் ரெட்டியிடம் வழங்கினார்கள். அந்த கடிதத்தில், தமிழ்நாட்டுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இந்த திட்டம் திகழும். இதன்மூலம் தமிழக மக்கள் பயன்பெறுவார்கள் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக கூடுதலாக 3 டி.எம்.சி. வரை கிருஷ்ணா நீரை பெற திட்டமிட்டு உள்ளோம். இது தொடர்பாக ஆந்திர முதல்-மந்திரியை சந்தித்து பேச உள்ளோம். ஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று ஆந்திர முதல்-மந்திரி தண்ணீர் வழங்கி உள்ளார்.

எனினும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி கூடுதலாக 3 டி.எம்.சி. தண்ணீர் வழங்க கோரிக்கை வைக்கப்படும். அப்போது கிருஷ்ணா - காவிரி-கோதாவரி இணைப்பு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு