வேலூர்,
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 4,965 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டே தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 4,496 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் 3,213 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக குடியாத்தம் நகராட்சியில் 8 நாட்கள் (ஜூலை 24ம் தேதி முதல் ஜூலை 31 வரை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
* இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,536 ஆக அதிகரித்துள்ளது.