தலைப்புச் செய்திகள்

16 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்த அமேசான்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அமேசான்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அமேசான். இந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் 15 லட்சம் பேர் வேலை செய்து வருகிறனர். குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் வேலை செய்துவரும் ஊழியர்களில் 16 ஆயிரம் பேரை அமேசான் நிறுவனம் இன்று பணிநீக்கம் செய்துள்ளது. பொருளாதார நெருக்கடி, செயற்கை நுண்ணறிவு தாக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் 16 ஆயிரம் பேரை அமேசான் பணிநீக்கம் செய்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆயிரம் பேரை அமேசான் நிறுவனம் பணி நீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்