தலைப்புச் செய்திகள்

புத்தகம் குறித்த சர்ச்சை: மவுனம் கலைத்தார் முன்னாள் ராணுவ தளபதி நரவனே

திப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், எம்.எம்.நரவனேவும் இவ்விவகாரம் தொடர்பாக தனது மவுனத்தை கலைத்துள்ளார்

புதுடெல்லி,

சீன ராணுவ ஆக்கிரமிப்பு குறித்து முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதி இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் சர்ச்சையை எழுப்பினார். ஆனால் அந்த புத்தகம் இன்னும் வெளியிடப்படவில்லை என்று மத்திய அரசு மறுத்தது. இதற்கிடையே, புத்தகத்தின் கையெழுத்துப் பிரதிகளை சட்டவிரோதமாக புழக்கத்தில் விட்டதாக டெல்லி போலீசார் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பெங்குவின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா புத்தகப் பதிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் ராணுவத் தளபதி நரவனே எழுதிய ‘போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி’ என்ற புத்தகத்தின் பிரத்யேக பதிப்புரிமையை நாங்கள் பெற்றுள்ளோம். அந்த புத்தகம் இன்னும் பிரசுரிக்கப்படவில்லை. அச்சு வடிவிலோ, டிஜிட்டல் வடிவிலோ எந்த பிரதியும் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை. எனவே, அச்சு வடிவிலோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ அந்த புத்தகத்தை முழுமையாகவோ அல்லது பகுதி அளவிலோ வெளியிட்டால், அது பதிப்புரிமை மீறலாகும். அத்தகைய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த பிரதிகள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

பதிப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், எம்.எம்.நரவனேவும் இவ்விவகாரம் தொடர்பாக தனது மவுனத்தை கலைத்துள்ளார். எம்.எம்.நரவனே கூறுகையில், பெங்குயின் பதிப்பகத்தின் விளக்கத்தைப் பகிர்ந்த ஜெனரல் நரவனே, "நிலைமை இதுதான்" என்று தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது அந்தப் புத்தகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும், அங்கீகரிக்கப்பட்ட பிரதிகள் எதுவும் புழக்கத்தில் இல்லை என்றும் பதிப்பகம் தெரிவித்ததை நரவனே முழுமையாக உறுதிப்படுத்தினார்.