தலைப்புச் செய்திகள்

பிரதமர் மோடி இன்று வரும் நிலையில் சீக்கிய அமைப்புக்கு வெடிகுண்டு மிரட்டல்

பிரதமரின் வருகைக்கு முந்தைய நாள் மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சண்டிகார்,

சீக்கிய மத அமைப்பான தேரா சச்காண்ட் பல்லான் அமைப்பின் தலைவர் சாந்த் நிரஞ்சனுக்கு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜலந்தரில் உள்ள தேரா சச்காண்ட் பல்லான் தலைமையகத்துக்கு செல்கிறார்.

இந்நிலையில், நேற்று அந்த அமைப்புக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும், ஜலந்தர் நகரில் 5 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பிரதமர் மோடியை காலிஸ்தானிகளின் எதிரி என்று மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பிரதமரின் வருகைக்கு முந்தைய நாள் மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜலந்தரில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. அந்த பள்ளிகளிலும், தேரா சச்காண்ட் பல்லான் தலைமையகத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். ஆனால் அதில் சந்தேகத்துக்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, அது வெறும் புரளி என்று தெரிய வந்தது.

Budget 2026: மத்திய பட்ஜெட் 2026 - நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்...!

தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைவதில் பின்னடைவு

தாம்பரம்-திருவனந்தபுரம் அம்ரித் பாரத் ரெயிலின் நேரம் மாற்றம்

கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில் பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

அமெரிக்க பங்குச்சந்தையின் வக்கீல் நோட்டீசை ஏற்க அதானி சம்மதம்