தலைப்புச் செய்திகள்

விஜய் பொதுவெளிக்கு வர வேண்டும்: அதிமுக மீதான விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

ஜெயலலிதாவை ரோல்மாடல் என்று சொல்லிவிட்டு யாரை ஊழல் சக்தி என்று சொல்கிறார் விஜய் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எங்கள் தலைவர்கள் இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்கள். சாத்தியம் என நினைப்பதால்தான் அதிமுக வாக்குறுதிகளை அறிவிக்கிறது. கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என முதல் நாளே அமித்ஷா தெளிவுபடுத்திவிட்டார்.

விஜய் பொது வெளிக்கே வரவில்லை. ஒரு சம்பவம் 72 நாட்கள் வரை வெளி வரவில்லை. பொதுவெளிக்கு விஜய் வந்ததால் தான் என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரியும். எந்த கூட்டணிக்கு யார் தலைமை என ஒன்றுமே தெரியாமல் இருக்கிறார் விஜய்.

ஒன்றுமே தெரியாத விஜய் பேசுவதை வைத்து எங்களிடம் கேள்வி கேட்க வேண்டும். விஜய்யை இதுபோன்ற பிரஸ் மீட் வைக்க சொல்லுங்கள். கேள்விக்கு பதில் சொல்ல சொல்லுங்கள்.

மக்களையும் பார்ப்பதில்லை, தொலைக்காட்சியையும் பார்ப்பதில்லை. எங்களிடம் கேள்வி கேட்டக்கூடாது. ஒரு கட்சியின் தலைவருக்கு ஏதாவது தெரிந்திருக்க வேண்டும். தெரியாமல், அறியாமல் பேசுகிறார் விஜய்.

ஊழல் சக்தி என யாரை குறிப்பிட்டு சொல்கிறார். எங்களை ஊழல் என சொல்வதற்கு வழியே இல்லை. எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை ரோல்மாடல் என விஜய் கூறுகிறார்.

அப்படி எனில் ஊழல் கட்சி என எங்களை சொல்லவில்லை. என் மீதான ஊழல் குற்றச்சாட்டில் இருந்து எந்த தவறும் இல்லை என நிரூபித்து வந்திருக்கிறேன். எங்கள் மீதோ எங்கள் கூட்டணி மீதோ எந்த குற்றச்சாட்டும் ஸ்டாலினால் முன்வைக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.