தலைப்புச் செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறு; கணவரை நடைபயிற்சிக்கு அழைத்து சென்று புதுப்பெண் செய்த அதிர்ச்சி சம்பவம்

கணவருக்கு தெரியாமல் சஞ்சயை ரகசியமாக சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளார் அஞ்சலி.

புதுடெல்லி,

ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டம் ராவ்லா காவல் நிலைய பகுதியில் கடந்த 31-ம் தேதி விபத்து ஏற்பட்டதாகவும் அதில் ஆஷிஷ் என்பவர் இறந்து கிடப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ஆஷிஷ் (வயது 25) என்பவர் இறந்து கிடந்தார். அருகில் அவரது மனைவி மயங்கிய நிலையில் கிடந்தார்.

உடனே போலீசா ஆஷிஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அஞ்சலியிடம் போலீசார் விசாரித்தனர். இந்தநிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆஷிஷ் விபத்தில் இறக்கவில்லை என்றும் அவர் கழுத்தை நெரித்தும், அடித்தும் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதனையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் மனைவி அஞ்சலியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அஞ்சலி விபத்து நடந்தது என்றும், மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் அடித்துவிட்டதாகவும் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் அஞ்சலி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் ஆஷிசை கொலை செய்தது அம்பலமானது. ஆஷிசுக்கும் அஞ்சலிக்கும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் ஆனது. திருமணத்துக்கு முன்பே அஞ்சலி சஞ்சிவை காதலித்து வந்தார். திருமணதுக்கு பின்னர் அஞ்சலியால் சஞ்சயை மறக்க முடியவில்லை. தொடர்ந்து சஞ்சயை ரகசியமாக சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளார்.

மேலும் வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் அஞ்சலி, சஞ்சயுடன் உல்லாசத்தில் இருந்து வந்தார். இதனை தொடர்ந்து தங்கள் காதலுக்கு இடையூறாக வந்த ஆஷிசை கொலை செய்வது என அவர்கள் திட்டமிட்டனர். இதற்காக சம்பவத்தன்று அஞ்சலி கணவர் ஆஷிசை நடைபயிற்சி செல்வதாக கூறி அழைத்து சென்றார். ஏற்கனவே திட்டமிட்டபடி அங்கு சஞ்சய் தனது நண்பர்கள் ரோஹித் என்கிற ராக்கி மற்றும் பாதல் என்கிற சித்தார்த் ஆகியோருடன் புதரில் மறைந்து இருந்தார்.

ஆஷிஷ் வந்ததும் அவரை சஞ்சய் உளிட்ட 3 பேரும் சேர்ந்து சரமாரியாக கடையாலும், கம்பியாலும் தாக்கினர். இதில் நிலை குலைந்த ஆஷிஷ் கிழே விழுந்தார். உடனே 3 பேரும் மப்ளரால் ஆஷிஷ் கழுத்தை நெரித்தனர். இதில் ஆஹிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனே அஞ்சலி கணவரின் செல்போன், நகைகளை தாகலன் சஞ்யிடம் கொடுத்து தப்பி செல்லுமாறு கூறினார். பின்னர் மயங்கி விழுந்து கிடப்பது போல் நடித்து தங்கள் மீது காரை மோதவிட்டு நகை, செல்போனை மர்மநபர்கள் பறித்து சென்றதாக நாடகம் ஆடினார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அஞ்சலி,சஞ்சய், ரோஹித், சித்தார்த் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.