மூணாறு,
சர்வதேச சுற்றுலா தலமாக மூணாறு விளங்குகிறது. கேரள மாநிலத்தில் பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மூணாறுக்கு வருகை தருகின்றனர். இந்தநிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மூணாறில் இருந்து திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய நகரங்களுக்கு புதிய அரசு பஸ் சேவை நேற்று முதல் தொடங்கியுள்ளது.
அதன்படி, மூணாறில் இருந்து அதிகாலை 3 மணிக்கு திருவனந்தபுரத்துக்கும், காலை 8.30 மணிக்கு கோழிக்கோடுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில், திருவனந்தபுரம் செல்லும் அரசு பஸ் கோட்டயம் வழியாக இயக்கப்படுகிறது.
இந்த பஸ் இரவு 10.30 மணிக்கு மறுமார்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து மூணாறுக்கு புறப்படுகிறது. அதேபோல் கோழிக்கோடுவில் இருந்து காலை 8.30 மணிக்கு மூணாறுக்கு மற்றொரு பஸ் புறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.