தலைப்புச் செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல்: ‘இலவசம்’ வாக்குறுதிகளுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதை தடுக்க தேர்தல் நடத்தை விதிகளை திருத்த வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வக்கீல் ஜெய சுகின், நரேந்தர் குமார்வர்மா ஆகியோர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது.

அறிவிக்கப்படும் இலவச வாக்குறுதி திட்டங்களால் ஏற்படும் நிதிசார் பாதிப்புகள், அதற்கான நிதி முதலீடு குறித்து அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும். எனவே, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் உத்தரவிட வேண்டும்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதை தடுக்க தேர்தல் நடத்தை விதிகளை திருத்த வேண்டும். இலவச வாக்குறுதி திட்டங்களின் சாத்தியக்கூறுகளை ஆராய நிதி ஆயோக், ரிசர்வ் வங்கி போன்றவற்றின் நிபுணர்களை கொண்ட சுதந்திரமான குழுவை கொண்டு ஆராய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Budget 2026 Live Updates... மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

“வெற்றி மேல் வெற்றி சேர..” - துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தைப்பூச வாழ்த்து

தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைவதில் பின்னடைவு

தாம்பரம்-திருவனந்தபுரம் அம்ரித் பாரத் ரெயிலின் நேரம் மாற்றம்

கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில் பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை