லண்டன்,
உலக அரங்கில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் முற்றியுள்ள நிலையில், பிற மேற்கத்திய நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்த சீனாவுடன் கைகோர்க்க தொடங்கியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக சீனாவுடன் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி 4 நாட்கள் அரசு முறை பயணமாக சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 2017-க்கு பிறகு சீனாவிற்கு சென்ற முதல் கனடா பிரதமர் இவராவார்.
கனடாவை தொடர்ந்து, இப்போது இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் பீஜிங் சென்ற அவரை அந்நாட்டின் நிதி மந்திரி லான்போன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 8 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து பிரதமர் ஒருவர் சீனாவிற்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
60-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களுடன் சீனா சென்றுள்ள பிரதமர் ஸ்டார்மர், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து இந்த பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.