அகமதாபாத்,
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தோல்கா நகரில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஜவுளி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ள ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றுக் கொண்டு இருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக ரசாயன தொட்டியில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதை சுவாசித்த தொழிலாளர்கள் சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக டி.எஸ்.பி. நிதிஷ் பாண்டே கூறியுள்ளார்.