செய்திகள்

நாகையில் தொழில் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

நாகையில் தொழில் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழகம் மண்டல பணிமனை முன்பு அனைத்து தொழில் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ. டி.யூ. துணைபொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுசெயலாளர் பாண்டியன், கிளை செயலாளர் முருகையன், சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் மணிமாறன், மாவட்ட செயலாளர் சீனிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் சம்பளம்

ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். பென்சன் தொகை ரூ.10 ஆயிரத்தை உடனே வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் கொடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் போக்கை கைவிட வேண்டும். குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்